மஹேந்திரசிங் தோனி தற்போதைக்கு ஓய்வு பெற போவதில்லை என்று அவரின் நண்பர் கூறியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக ஆடாத மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறனை பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி இந்த உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இந்நிலையில் டோனியின் நீண்ட கால நண்பரான அருண் பாண்டே கூறுகையில், டோனியிடம் ஓய்வு பெறுவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை. அவரைப் போன்ற ஒரு சிறந்த வீரரின் எதிர்காலம் குறித்த தொடர்ச்சியான விமர்சனங்கள் ஊகங்களில் வருவது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார். இதனால் தோனி தற்போதைக்கு ஓய்வு இல்லை என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.