ஹேப்பி நியூஸ்…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. தமிழக அரசு அதிரடி…!!

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களுடைய கோரிக்கை அரசாங்கத்தால் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்நிலையில் அவர்களுடைய நலன் காக்கும் வகையில் தமிழக அரசு ஆலோசனை நடத்தி அதில் ரேஷன் உயர்வு சம்பள உயர்வு பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி விற்பனையாளர்களுக்கு ஊதியம் ரூ.5000 இலிருந்து ரூ.6,250 ஆக உயர்த்தப்படுகின்றது. மேலும் ஒரு வருடம் பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியம் ரூ.8,600-ரூ.29,000 வழங்கப்படும். மேலும் கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம்ரூ.4,250 லிருந்து 5,500 வைக்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடம் பணி முடித்த கட்டுனர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.7,800-ரூ.26,000 வழங்கப்படும். இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *