“இது இவர்களுக்கான முகாம்” ஏராளமானோர் பங்கேற்பு…. நலத்திட்ட உதவிகள் வழங்கிய அலுவலர்….!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து மாற்றுத்திறன் குழந்தைகளை மதிப்பீடு செய்துள்ளனர்.

மேலும் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து பயண அட்டை பராமரிப்பு, உதவித்தொகை மற்றும் இருசக்கர நாற்காலிகள், ரிலேட்டர் ஆகியவற்றை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வழங்கி பேசியுள்ளார். இந்த முகாமில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார கல்வி அலுவலர், வட்டார ஒருங்கிணைப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.