செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, அறநிலையத்துறை வழக்கறிஞர் கார்த்திகேயன் கிட்ட அபிடவிட்  கொடுத்து இருக்கேன். கவர்னர் கிட்ட 2000 இந்து கோவில்கள் தொடர்பாக கோரிக்கை புகார் கொடுத்திருந்தேன். அதை ஆளுநர் அவர்கள் கமிஷனருக்கு பார்வேர்ட் பண்ணி,  எனக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி கமிஷனர் கிட்ட இருந்து கடிதம் வந்தது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றை வருஷம் ஆச்சு. 2 ஆயிரம் கோவில்கள் கோரிக்கைகள் கொடுத்து பரிசீலித்துக் கொண்டு இருக்கின்றோம் என பதில் வந்துள்ளது. இந்து கோவில்களின் எண்ணிக்கை இந்த அரசாங்கத்திற்கு தெரியவே தெரியாது என, ஜட்ஜ்மென்ட் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் அறநிலைத்துறை இருக்கு அப்படின்னு சொல்லி இருக்காங்க. ஆனால் இந்த கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர்  சேகர்பாபு சொல்லி இருக்காரு.

சேகர்பாபு பாபுவா ? அல்ல அல்லேலூயா பாபுவா என எனக்கு தெரியல. அந்த அல்லேலூயா பாபு கொடுத்திருக்கிறது. 36,000 கோவில் இருப்பதாக தான்  கொடுத்திருக்காங்க. கோவில் எண்ணிக்கையில் இவர்களுக்கு உறுதியான கணிப்புகள் கிடையாது. பத்து வருஷத்துக்கு முன்னாடி அரசின் கொள்கை விளக்க குறிப்பில் இந்த கோவில்களுக்கு 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் மானாவாரி என கொடுத்திருந்தார்கள்.

இப்போ பார்த்தீங்கன்னா…  அது 4.75ஆ மாதிரி இருக்கு. அப்போ 50 ஆயிரம் ஏக்கர் என்னாச்சு ? அது தெரிஞ்சாகணும். இந்து கோயில் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. திருமயம் பெருமாள் கோவில் 108 திவ்யதேசத்தில் இதுவும் ஒன்று. இதோடு சொத்துக்கள் எத்தனை ஆக்கிரமிப்பில் இருக்கு. இந்த ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக இந்த அல்லேலூயா பாபு ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கின்றாரா ? இதுவரை இந்த அரசாங்கம் இந்துக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கிறது.

காரணம் முதல்வர் பையனே கிறிஸ்தவர் தான் என அவரே சொல்கிறார். மருமகள் கிறிஸ்தவர்.  ஆகவே ஆட்சி கிறிஸ்தவ ஆட்சியாக இருப்பதால்   இந்து கோவில்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்து கோவில்கள் அனைத்தும் அறங்காவலர்கள் வசம், ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஏன்னா நீ கிறிஸ்தவர் சர்ச்_சை எடுத்துக்கல. அத எடுக்க முதுகெலும்பு கிடையாது கிறிஸ்த ஸ்டாலினுக்கு. அவர் மனைவியும் கிறிஸ்தவர். இதை நாம் சொல்லல. அவுங்களே ஒப்பு கொள்கின்றார்கள். ஆகவே மசூதி எடுப்பதற்கு வக்கு உண்டா ?  முதுகெலும்பு உண்டா ?தைரியம் உண்டா ? இந்து கோவில் எடுத்திருக்கிறீர்கள் பேசினார்.