அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு…!!

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பின் படி, 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் காலை10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு மதியம் 2 மணிக்குத்தொடங்கி மாலை 5.15 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளைப் படிப்பதற்கும் விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் உள்ள மூன்று மணி நேரம் வினாக்களுக்கு விடையளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி,

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை :

Image result for மாணவர்கள்

13.12.2019 – மொழித்தாள்;

16.12.2019 – ஆங்கிலம்

17.12.2019 – விருப்பப்பாடம்;

18.12.2019 – கணிதம்;

20.12.2019 -அறிவியல்;

23.12.2019 – சமூக அறிவியல்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:

Image result for மாணவர்கள்

11.12.2019 – மொழித்தாள்; 12.12.2019 – ஆங்கிலம்

14.12.2019 – கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டசத்துவியல், துணிநூல் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மற்றும் மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங்

16.12.2019 – இயற்பியல், பொருளாதாரம், கணினித் தொழில்நுட்பம்

18.12.2019 – தொடர்பு ஆங்கிலம், இந்தியக் கலாசாரம் மற்றும் கோட்பாடுகள், கணினி அறிவியல், கணினிப் பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்

20.12.2019 – வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்

23.12.2019 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், துணிநூல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் நிர்வாகம்

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை : 

Image result for மாணவர்கள்

11.12.2019 – மொழித்தாள்;

12.12.2019 – ஆங்கிலம்

14.12.2019 -இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்

16.12.2019 – கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், துணிநூல் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மற்றும் மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங்

18.12.2019 – வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்

20.12.2019 – தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கோட்பாடுகள், கணினி அறிவியல், கணினிப் பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ், மனை அறிவியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்

23.12.2019 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், துணிநூல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் நிர்வாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *