“சாமி… சாமி…. ஓ…சாமி” செம குஷியில் எச். ராஜா போட்ட ட்விட்…. இணையத்தில் வைரல்…!!!!

பாஜக அமைச்சர் எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு கலகலப்பு ஏற்படுத்தியுள்ளார். அதில் “கேட்டதில் ரசித்தது. சுப்பிரமணிய சுவாமியாக வந்து வழக்கு தொடர்ந்தாய்.. குமாரசாமியாக விடுதலை செய்தாய் பழனிச்சாமியாக வந்து கமிஷன் போட்டாய்.. ஆறுமுகசாமியாக விசாரிக்கிறார்.. முருகா உன் திருவிளையாடலில் மகிமையே மகிமை..” .

இந்த நிலையில் இவர் போட்டுள்ள ட்விட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சாமிகள் தான் செம கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவு ஜெயலலிதாவின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் அவரது மரணம் தொடர்பான விசாரணை கமிஷன். இதையெல்லாம் வைத்துதான் இந்த திட்டத்தை போட்டுள்ளார் எச் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து முதலில் ஜெயலலிதா மீது வழக்கு போட அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி கேட்டது சுப்பிரமணிய சாமி. அவர் வழக்கு தொடர்ந்து ஜெயலலிதாவின் அரசியல் தீர்மானத்திற்கு முதல் அடியை வைத்தார். இதனைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி. அந்த வழக்கில் அவர் தெரிவிக்கப்பட்டிருந்த தவறான கணக்கு கேலிக் கூத்தாக அமைந்தது.

இவர்களைத் தொடர்ந்து அடுத்து சாமி பழனிசாமி. இவர்தான் அடுத்ததாக ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணைக் கமிஷனை தொடங்கினார். அதாவது ஆறுமுகசாமி கமிஷனை அமைத்தது இவரது ஆட்சி தான். இந்த ஆறுமுகசாமி தான் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நீண்ட காலமாக பார்த்து வருகிறார். ஆக.. எச் ராஜா போட்ட ட்விடில் சாமிகள் எல்லாம் கடவுள் முருகன் சம்பந்தப்பட்ட பெயர்கள் என்பதால் தான் போட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்த ட்விட்டர் பதிவில் பார்த்த நெட்டிசன்கள் தங்களது பங்குக்கு பல சாமிகளை சஜ்ஜஸ்டை செய்து வருகின்றனர். அந்த வகையில் “ராமசாமியாக வந்த பகுத்தறிவு ஊட்டினாய் இதையும் சேர்த்துக்கோங்க” என்று  நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *