சமூக பணியில் அதிக ஆர்வம் காட்டும் பிரபல இசை இயக்குனர் ..!!

பிரபல இசை இயக்குனர் ஜிவி பிரகாஷ் சமூக பணிகள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் .

பிரபல இசை இயக்குனரும், கதாநாயகனுமான ஜிவி பிரகாஷ் தன்னை அதிக அளவில் சமூகப் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது ,படங்களில் நடிப்பதை விட சமூகத்திற்காக பணியாற்றும் பொழுது மிகுந்த சந்தோஷத்தை அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்தில் பலர் சமூகத்திற்காக பணியாற்றி வருகின்றனர் .அத்தகைய நல்ல உள்ளங்களை நானே தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்து யூடியூப்பில் ஒளிபரப்பி வருகிறேன்.

அவர்களை பார்க்கும் போதெல்லாம் என்னையும் சமூகப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வந்தது. அதன்படியே தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் எனது அதிகபட்ச சமூக அக்கறையே அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *