“நடைபெற்ற தீவிர ரோந்து பணி” வசமாக சிக்கிய தந்தை-மகன்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!

குட்கா கடத்தி வந்த தந்தை-மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி மேம்பாலம் அருகே அதியமான்கோட்டை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெங்களூருவிலிருந்து வந்த கார் ஒன்றை மடக்கிப்பிடித்து காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் காரில் வந்த ஓட்டுனர் மற்றும் உடன் வந்த 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் நரசிம்மன், அவரது மகன் பிரபாகரன் மற்றும் ஓட்டுனர் மனோஜ் ஆகிய 3 என்பது தெரிய வந்தது. மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *