வாக்குச்சாவடியில் தூப்பாக்கி சூடு…பரபரப்பில் பொதுமக்கள்…!!

நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் வாக்குச்சாவடியில் வானத்தை நோக்கி தூப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

பாராளுக்குமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வகுப்பதிவு, தமிழகத்தில் 32 பாராளுமன்ற தொகுதிக்கும் 18 சட்டமன்ற தொகுதிக்கும் அதைப்போல   புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 

 

 

இந்நிலையில், அரக்கோணம் தொகுதி  ஆற்காடு வாக்குச்சாவடி வாக்குப்பதிவு  நிறைவடையும் நேரத்தில் பொதுமக்கள் வாக்களிக்க திரண்டு வந்ததால், அவர்களை கலைக்க போலீசார் முயன்றனர் அனால் பொதுமக்கள் நெரிசலில் திரண்ட வண்ணம் இருந்ததால் வேறு வழியின்றி  வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.இதனால பொதுமக்கள் அனைவரும் பதட்டதுடன் அலறியவாறு ஓடினர்.பொதுமக்கள் திரண்டிருந்த அந்த வாக்குச்சாவடியில் போலீசார் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.