ரேஷன் அரிசி கடத்தல்…. கையும் களவுமாக சிக்கிய நபர்…. குண்டரில் கைது செய்த போலீஸ்….!!!

தொடர் கடத்தலில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் ஓட்டுனர் மாரியப்பன் வசித்து வருகின்றார். இவர் அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். எனவே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இவர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனைதொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாரியப்பனை குண்டர் தடுப்பு திட்டத்தின் கீழ் கைது செய்து காவல்துறையினர்  சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *