செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிநீரில் மலத்தை கலந்தவரை இன்னும் கைது செய்யாதது யார் பொறுப்பு ? காவல்துறை யார் கையில் இருக்கு ? அவரை கேளுங்க? ஊடகவியலாளர்கள் அண்ணன்கிட்ட கேட்கறதுக்கு பதிலா, நான் தான் அந்த செயலோடு கரைந்து நிற்கிறேனே.. நான் கண்டிக்கிறேன். நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்.

அப்ப நடவடிக்கை எடுக்காதவரிடம் கேள்வி கேளுங்க. ஏன் எடுக்கவில்லை என்று மக்களிடம் போய் சொல்லுங்கள். அவரு தான சமூக நீதியின் காவலர். சமத்துவத்தின் நாயக்கர் அவர்தான். சாதி ஒழிப்பு தான் திராவிடம் என்று பேசியவர்கள்,  இப்ப வாய் திறக்கக்கல. அங்க இருக்கிற வாடகை வாய்கள் பல நூறு இருக்குதே. மாசம் சம்பளம் வாங்கிட்டு. அந்த வாய்கள் பேச வேண்டியதுதானே..

ஆதிதிராவிட அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தான் அமைச்சராக இருப்பார்.  முதல்வர் சொல்லாம எப்படி அவர் பாப்பாரு ? ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் முதல்வர் சொல்லாமல் போய் பார்த்தால், அடுத்த நாள் அமைச்சராக இருக்க முடியாது. முதல்வர் போய் பாருங்க என சொல்லனுமா ? இல்லையா ?

மோடி உடைய அம்மா இறந்ததற்கு நீங்க போறீங்க என சொல்லுறாங்க.  சில இடத்துக்கு போறீங்க, வரீங்க அதை நான் வரவேற்கிறேன். ஆனா இதுக்கு போய் பாக்கணும் அல்லவா. குடிகள் பாதிப்புக்கு ஆளாகுறாங்க அல்லவா ? அப்போ கண்டிப்பா போகணும் தான். அப்படி போகாம நீங்க ஏன் பெரியாரை பேசுறீங்க. நீங்க ஏன் தீண்டாமை ஒழிப்பு பத்தி பேசுறீங்க ? சாதி ஒழிப்பு,  சமூகநீதி எல்லாம் நீங்க  ஏன் பேசுறீங்க ? அது வெற்று கூச்சல்,  வெற்று முழக்கம், வெற்று பேச்சு என ஒத்துக்கோங்க என தெரிவித்தார்.