அசத்தலான சுவையில்  நிலக்கடலை சட்னி !!!

சுவையான  நிலக்கடலை சட்னி செய்வது எப்படி ..
தேவையான பொருட்கள்:

நிலக்கடலை – 1 கப்

வர மிளகாய் – 8

பூண்டு – 2 பல்லு

தேங்காய் துருவல் – 1/4  கப்

இஞ்சி – 1 துண்டு

புளி – சிறிதளவு

கடுகு – 1/4 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1/4  தேக்கரண்டி

உளுந்து – 1/4  தேக்கரண்டி

பெருங்காயம் – சிறிதளவு

கொத்தமல்லி இலை  – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் –  தேவையானஅளவு

கறிவேப்பிலை – தேவையானஅளவு

நிலக்கடலை க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் தேங்காய் துருவலை சேர்த்து  வறுத்துக் கொள்ள  வேண்டும்.பின் இதனுடன் நிலக்கடலை, வர மிளகாய் ,கொத்தமல்லி இலை ,பூண்டு , இஞ்சி , தேவையான உப்பு   மற்றும் புளி சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு,கடலைப்பருப்பு , உளுந்து,பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து  அரைத்த விழுதில் கொட்டினால் அசத்தலான நிலக்கடலை சட்னி தயார் !!!