சேலத்தில் வருகிற 7-ம் தேதி ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம்…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் வருகிற அக்டோபர் மாதம் 7-ம் தேதி காலை 10.30 மணி முதல் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் இருக்கும் அறை எண் 215-ல் அரசு ஓய்வூதிய இயக்குனரால் நடத்தப்படும்.

இந்த கூட்டத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய ஓய்வூதியம் தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணலாம். மேலும் ஓய்வூதியம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அது தொடர்பாக மனு கொடுத்தால் விரைவில் உங்கள் பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார்.