கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி அந்த நாட்டிற்கு பிரதமராக இருப்பதாகவும் அங்கு குடியேற 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா கூறிவருகிறார்.
பல்வேறு வழக்குகளில் சிக்கி தேடப்பட்டு வரும் இவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிடுள்ளார். கொரானாவில் இருந்து காத்துக்கொள்ள பச்சை பட்டினி விரதம் இருக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
உலகில் ஹிந்து தர்மத்தை தவறாமல் கடைப்பிடிக்கும் பகுதிகளில் தாக்க வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மாசிமாத விரதத்தை சரியாக கடைபிடித்தால் தாக்கம் இருக்காது என கூறியுள்ளார். எனும் மஞ்சள் வேப்பிலை கலந்த தண்ணீரில் தினமும் நீராடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாசிமகம் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் மூல கோயிலாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மன் விரதம் இருப்பதாகவும் அம்மனுக்கு நெய்வைத்தியம் செய்யப்படும் பானகம், இளநீர் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்து வந்தால் வைரஸ் தாக்குதல் அறவே இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.
கைலாசம் இதுவரை பாதிக்கப்படவில்லை என்று கூறும் நித்யானந்தா எதிர்காலத்திலும் எங்களை கொரானா வைரஸ் தாக்காது என்று கூறியுள்ளார். பரமசிவனும் கால பைரவரும் தங்கள் பாதுகாவலராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.