எப்படி நடந்ததுன்னு தெரியல… பிணமாக மீட்கப்பட்ட மூதாட்டி.. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டை விட்டு சென்ற மூதாட்டி தைல மரக்காட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உடையாளிப்பட்டி கிராமத்தில் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா என்ற மனைவி இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு வராததால் சின்னையா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் கந்தர்வகோட்டை பகுதியிலிருக்கும் தைல மரக்காட்டிலில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது அவர் வீட்டை விட்டு சென்ற பாப்பா என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.