ரொம்ப நேரமாயிருச்சு… எங்கேயும் இல்லை… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தண்ணீர் எடுக்க சென்ற மூதாட்டி குளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் சாரதா அப்பகுதியிலுள்ள குளத்திற்கு தண்ணீர் எடுக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் அப்பகுதிகளில் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் கோவில் குளத்திற்கு சென்று பார்த்த போது குளத்தில் குடம் மட்டும் மிதந்து கொண்டிருந்தை பார்த்த சுப்பிரமணி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாரதாவின் உடலை பிணமாக மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.