சமையல் செய்தபோது உடையில் தீ  பிடித்து உயிரிழந்த மூதாட்டி… நெல்லையில் சோகம் !!

திரு­­நெல்­வேலி,பாளையங்கோட்டை அருகே சமையல் செய்தபோது உடையில் தீ  பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாளையங்கோட்டை அருகேயுள்ள   பெரு­மாள்­பு­ர­ம், என்.எச்.கா­ல­னியைச் சேர்ந்த சண்­முகம் என்பவரின் மனைவி 80 வயதான முத்­தம்மாள்.இவர் சற்று மன­நிலை   பாதிக்­கபட்டவர்.அவர் வீட்டில் அடுப்பில் சமையல் செய்த போது திடீரென உடையில் தீப்­பி­டித்ததில்  உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் .

death body க்கான பட முடிவு

இச்சம்பவம் குறித்து ­­பெரு­­மாள்­புரம் போலீசார் விசா­ரணை நடத்­தி­ வருகின்றனர் .