மறைந்த தந்தைக்காக பிரம்மாண்ட நினைவாலயம்….. நடிகர் மகேஷ்பாபு எடுத்த நெகிழ்ச்சி முடிவு?…. வெளியான தகவல்…..!!!!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகர் கிருஷ்ணா கடந்த வாரம் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மகன் பிரபல நடிகர் மகேஷ்பாபு. இவர் தன்னுடைய தந்தை கிருஷ்ணாவுக்கு தற்போது ஒரு மிகப்பெரிய நினைவாலயம் ஒன்றினை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி ஹைதராபாத்தில் உள்ள மகேஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான பத்மாலயா ஸ்டுடியோவில் ஒரு மிகப்பெரிய நினைவாலயத்தை கிருஷ்ணாவுக்காக கட்ட இருக்கிறாராம். இந்த நினைவாலயத்தில் நடிகர் கிருஷ்ணா வாங்கிய விருதுகள், அவருடைய புகைப்படங்கள் ‌ போன்றவையும் இடம்பெறுமாம்.

இந்நிலையில் எந்த ஒரு நடிகருக்கும் இதுவரை கட்டாத அளவில் மிக பிரம்மாண்டமாக நினைவாலயத்தை கட்டுவதற்கு மகேஷ் பாபு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply