மார்ச் 22-ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்… தமிழக அரசு உத்தரவு…!!!!

தமிழக அரசு வருகிற மார்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த கிராம சபை கூட்டங்களை மத சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக் கூடாது. அதேபோல் ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்டவாறுகளில் சுழற்சி முறையில் 22-ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்டத்தை நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply