பறக்கும் படை வாகனங்களில்…. ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தம்…. தேர்தல் பணிகள் தீவிரம்…!!

ஈரோடு மாவட்டத்தில் அடுத்த மாதம் 27-ஆம் தேதி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு 3 பறக்கும் படைகளும், 3 நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பறக்கும் படையினர் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். தற்போது கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் உபயோகப்படுத்தும் வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகாரிகள் எந்தெந்த பகுதிகளில் ரோந்து செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும்.

Leave a Reply