தண்ணீர் பிரச்சனை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்துகிறது…வசந்தகுமார் எம்.பி. பேட்டி…!

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்று MP வசந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகின்றது. தண்ணீர் பிரச்சனையை போக்க முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்து , அதில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதலவர் கூடுதல் நிதியை ஒதுக்கினார். மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் மாவட்ட தலைநகர் கோவில்களில் யாகம் நடத்த வேண்டுமென்றும் அறிக்கை வெளியிட்டனர். மேலும் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தீர்க்க மாவட்டம் முழுவதும் இன்று திமுக போராட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது.

MP வசந்தகுமார் க்கான பட முடிவு

இந்நிலையில் கன்னியாகுமரி சுசீந்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார்  கூறுகையில் , தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்துவது முற்றிலும் தவறானது. மழைவேண்டி யார் யாகம் செய்தாலும் அதை வரவேற்போம்.தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்தால் அது அதிமுகவிற்குதான் நஷ்டம்  என்று தெரிவித்தார்.