வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோயிலின் புனித யாத்திரையை கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 15_ஆம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த புனித யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த வழித்தட பாதையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்படட கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவமே வெளியிட்டுள்ளது. மேலும் காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி எடுத்து வருவதாகவும் இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து அமர்நாத் பாத யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் உடனே அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக காஷ்மீரில் அளவுக்கதிகமான துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்குள்ள அனைத்துபகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும் எதற்காக எவ்வளவு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதில் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யப்பட இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் பூதாகரமாக எழுந்துள்ளது. இதை தொடர்ந்து காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். அமைதியாக இருங்கள். அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே தான் இந்த நடவடிக்கை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.