“அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும்”… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!!!

கோவை மாநகராட்சியில் ஓட்டுநர்களாக நியமிக்க கோரி தூய்மை பணியாளர்கள் மாரிமுத்து, ஜெயபால் போன்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தூய்மை பணியாளர்களை அதிக வருமானம் உள்ள ஓட்டுனராக பயன்படுத்தியது சொந்த மக்களை அரசே சுரண்டுவதற்கு சமமானது. அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் ஜெயபால் மற்றும் மாரிமுத்து தொடர்ந்த மனுவில் கல்வித் தகுதியை காரணம் காட்டி தங்களை ஓட்டுநர்களாக நியமிக்க அரசு மறுத்து வருவதாகவும், கோவை மாநகராட்சி, குறைந்த ஊதியம் உள்ள தூய்மை பணியாளர்களான தங்களை ஓட்டுநர்களாக பயன்படுத்திவிட்டு பின் கல்வி தகுதியை காரணம் காட்டி ஓட்டுனர்களாக நியமிக்க அரசு மறுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.