பனியில் சிக்கி உயிரிழந்த இந்திய வீரரின் உடலுக்கு அரசு மரியாதை..!!

காஷ்மீரில் உள்ள எல்லை பாதுகாப்பு  பணியின் போது  உயிரிழந்த, மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

பாகிஸ்தான் அருகில் உள்ள சியாச்சின் பனிமலை பிரதேசத்தில் மைனஸ் 45 டிகிரி வரை குளிர் நிலவி வருவது வழக்கம், சியாச்சின் பனிக்கட்டிகள் நேரடியாக உடலின் மீது பட்டால், அந்த பகுதி கடும் குளிரில் உறைந்து ஒட்டிக்கொள்ளும் 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில், உறைந்து போகும் குளிரிலும், தாய் நாட்டுக்காக ராணுவவீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Image result for பால்பாண்டி  ராணுவ வீரர்,புதிய தலைமுறை

இந்நிலையில் சியாச்சின் பனிமலை தொடர்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வீரர் 23 வயதான பால்பாண்டி என்ற ராணுவ வீரர், கடந்த மாதம் காஷ்மீரில் சியாச்சின் பனிப்பொழிவு மலைத் தொடரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

Image result for பனிச்சரிவு

அப்போது அதிக பனிப்பொழிவு காரணமாக பாதுகாப்பு கண்காணிப்பு கோபுரத்தின் மேல் வீசிய பனி காற்றில் கோபுரம் சரிந்து விழுந்தது.அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ராணுவ முகாமில் சிகிச்சை பெற்று வந்த பால்பாண்டி உயிரிழந்தார். உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தது.தமிழகத்திலுள்ள மதுரை மாவட்டம் பிறந்த ஊரான அரசம்பட்டிக்கு அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.இதில் ராணுவ வீரரின் உறவினரான ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும்  துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ராணுவ வீரரின் உடல் அடக்கம்  செய்யப்பட்டது.