கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துக்காக நின்றவர் மீது அரசுப் பேருந்து மோதியதால் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புனல் நகர் சந்திப்பில் அரசு பேருந்து வந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் அந்த நபர் கீழே விழுந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்களில் சிலர் பேருந்தின் ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த வழியாக வந்த பத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடுவழியில் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுனரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.