“அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை “நீதிமன்றம் அதிரடி ..!!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகள் இன்றளவிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் காணப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் இருந்தால் அனைத்து அரசு ஊழியர்களும் அங்கேயே சிகிச்சை பெற்று இருப்பார்கள்.

ஆகவே அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும் வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை அறிவுறுத்தியுள்ளது.