பணத்திற்கு பதிலாக 10 ஸ்மார்ட் போனை வழங்கிய கூகுள்…!!!

தனது கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் தவறு ஏற்பட்டதால் ரெடிட் தளத்தில் சீடோஸ் என்ற பெயரில் உள்ள நபர் பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். இதற்கு கூகுள் நிறுவனம் 80 டாலர்கள் மட்டுமே வழங்கியுள்ளதாகவும், மீதி பணத்திற்கு பதிலாக பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளதாகவும் வெளியாகியுள்ளது.

Related image

பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் மொத்த விலை 9000 டாலர்களைவிட அதிகமாகும் (இந்திய மதிப்பில் ரூ.6,17,900) . இது குறித்து அந்த நபர் பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டிருப்பதை ரெடிட் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கூகுள் நிறுவனம் மீதி பணத்தை வழங்கினால் மட்டுமே, ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக   தெரிவித்துள்ளார்.

Related image

பாதிக்கப்பட்ட நபர் போன்களை திருப்பி தருவதாக கூறியும் , கூகுள் நிறுவனம் பிழை ஏற்பட்ட சாதனத்திற்கு வெறும் 80 டாலர்களை மட்டுமே வழங்கியுள்ளது.