டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய்.!! ஏன் ?

கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய் தன்னிடம்  மன்னிப்பு  கேட்டதாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  தெரிவித்தார்.

கூகிளின்  தாய் நிறுவனமான ஆல்பாபெட்டுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம்,  “கொரானா வைரஸ் பரிசோதனை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு நாடு தழுவிய வலைத்தளத்தை உருவாக்குவதில் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக” தெரிவித்தார். இந்த செயலுக்காக  கூகுள் நிறுவனத்திற்கு நன்றி கூறினார்.

இதைத்தொடர்ந்து, பேசிய அவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக கூறினார். ஆனால் அவர் எதற்காக மன்னிப்பு கேட்டார்  என்பது குறித்து விளக்கவில்லை. மேலும் அவர் சுந்தர் பிச்சாய்  ஒரு சிறந்த மனிதர் என்று கூறினார்.