குட் நியூஸ் : நீட் தேர்வு பயம் …. அரசு பள்ளிக்கு இல்லை … முதல்வர் புது திட்டம் …!!

அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததையடுத்து அதனை தடுக்கும் வகையில் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சீறாப்பு சட்டம் ஏற்றுவது தொடர்பாக தமிழக முதல்வர் 110 வீதியில் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில், அரசு பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வென்றால் மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேக உள்ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் ஏற்றப்படும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும்.

மேலும் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்ட்டும். மாணவர்கள் தேர்ச்சி குறைவதை சமூக , பொருளாதார ரீதியாக கண்டறிந்து அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கும். அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கையை  ஆணையம் பரிந்துரை செய்யும். இதில் பள்ளிக் கல்வி , சுகாதாரம், சட்டத்துறை செயலாளர், 2 கல்வியாளர்களை உறுப்பினர்களாக இருப்பர். சிறப்பு சட்டத்தில் வழங்கப்படும் உள்ஒதுக்கீடு எஸ்சி \ எஸ்டி மாணவர்களுக்கும் பொருந்தும். நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வரும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம் என்று முதல்வர் தெரிவித்தார்.