குட் நியூஸ் : 10ஆம் வகுப்புக்கு தேர்வு இல்லை… முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக அதற்கு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. மார்ச் 31-ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தாலும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சம் காரணமாக பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை  ஆசிரியர்கள் தரப்பில் இருந்தும், பெற்றோர்கள் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டு இருந்த சூழ்நிலை தற்போது 10ஆம் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு என்பது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு தேர்வு ஒத்திவைப்பு நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது. மார்ச் 27ஆம் தேதி தொடங்க இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.