தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மனிடம் வேண்டுதல் வைத்து வேண்டி வருகின்றனர் இந்த தங்க தேர் திருவிழாவில் ஏராளமான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்
நாடு முழுவதும் தேர்தல் கொண்டாட்டம் பரபரப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் குறித்த முடிவுகளை திட்டவட்டமாக எடுத்து அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளனர்

இதனைத் தொடர்ந்து சுயேச்சையாக நிற்க விரும்பும் கட்சிகள் சுயேச்சையாகவும் கூட்டணி வைக்க கூடிய கட்சிகள் கூட்டணியாகவும் எடுத்த நிலைப்பாடுகளில் தெளிவாக நின்று செயல் புரிந்து வருகின்றனர் இதனை அடுத்து தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் மாநில கட்சிகள் தங்களுக்கான கூட்டணி வலுவாக அமைத்து அதற்கான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
இதனைத் தொடர்ந்து அதிமுக வைத்துள்ள மெகா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் மற்றும் பிற தோழமை கட்சி தொண்டர்கள் பல்வேறு இடங்களில் உழைத்து வருகின்றனர்
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த மெகா கூட்டணி ஆனது வருகின்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தங்கத் தேர் இழுத்து திருவிழா போல் நடத்தி காமாட்சி அம்மனிடம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி வருகின்றனர்
இதனை தொடர்ந்து ஏராளமான அதிமுக தொண்டர்களும் பக்த கோடி பெருமக்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது