சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று மதிய நிலவரப்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5,580 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு சவரன் தங்கம் ரூ.44,640 இன்று மட்டும் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாகவே பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருவதால் அங்கிருந்து வரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் சாய்ந்து வருவதே விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.