தங்கம் விலை கிடு கிடு உயர்வு… பவுனுக்கு ரூ264 அதிகரித்ததால் பொதுமக்கள் கவலை..!!

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 264  அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்

கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பிட்ட அளவு விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்தது.மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 264 உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 264உயர்ந்து 29,704_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராமூக்கு ரூ33 உயர்ந்து ரூ 3713_க்கு  விற்பனை செய்யப்படுகின்றது.வெள்ளி விலை மாற்றம் இல்லாமல்   1 கிராம் 49.16_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.  தொடர்ந்து உயர்ந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால்  பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *