தங்கம் கிடுகிடு சரிவு…. ”1 பவுன் அதிரடி குறைவு” …. பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

தங்கம் விலை அதிரடியாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்துள்ளது சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 23 ரூபாயும், சவரனுக்கு 184 ரூபாய்யும் குறைந்து விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 184 குறைந்து  ரூ  29,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 23 குறைந்து ரூ 3,635 _க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல வெள்ளியின் விலை 1.40  காசுகள் குறைந்து ஒரு கிராமுக்கு ரூபாய் 47.80-க்கு  விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை நேற்று முன்தினம் குறைந்து , நேற்று  உயர்ந்து இன்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *