அதை தவிர எல்லாத்துக்கும் யூஸ் பண்றாங்க…. இப்படி கூட கடத்தலாமா… சோதனையில் சிக்கிய வாலிபரால் பரபரப்பு…!!

முக கவசத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த வாலிபர் சோதனையின் போது வசமாக சிக்கினார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய கமிஷனர் ராஜன் சௌத்ரிக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் தங்கம்  கடத்தி வரபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் விமானநிலைய கமிஷனரின் உத்தரவின் பேரில் துபாயில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது புதுக்கோட்டையில் வசித்து வரும் முகமது அப்துல்லா என்ற வாலிபர் முக கவசத்தின் உட்புறம் தங்க தகடை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைஅடுத்து ரூபாய் 8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள மடிகணினி, செல்போன்கள், சிகரெட்டுகள் மற்றும் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 65 கிராம் தங்கம் போன்ற அனைத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகள் முகமது அப்துல்லாவிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.