தவிர்க்க முடியாத வேலைக்காக வெளியே செல்லுகிறீர்களா?…. உங்கள் பாதுகாப்புக்கான டிப்ஸ்!

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் நேற்று நள்ளிரவு முதல் லாக்-டவுண் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான பால், காய்கறிகள் உள்ளிட்ட மளிகைக் கடைகள், மருந்தகங்கள் திறந்தே இருக்கும் என மத்திய அரசு தெரித்துள்ளது.

இந்த நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் வெளியே செல்லும் நிலை உள்ளது, வீட்டில் யாரெனும் ஒருவராவது வெளியே செல்லும் நிலை உள்ளதால் அவர்களால் அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தோற்று பரவ வாய்ப்புள்ளது. ஆனால் அப்படி வெளியே செல்லும் நபர் சில வழிமுறைகளைப் பின்பற்றினால், வைரஸ் பரவுவதை தடுக்கலாம். அது என்ன என இங்கு காண்போம்….

  • வீட்டில் இருந்து வெளியே செல்லும் நபர் ஒருவராக மட்டும் இருக்கும் வகையில் திட்டமிட்டு கொள்ளுங்கள். தேவையின்றி உடன் யாரும் செல்ல வேண்டாம்.
  • ஒரே பயணத்தில் அனைத்து விதமான பணிகளையும் செய்து முடிக்கும்படி செய்யலாம்.
  • வெளியே செல்ல பயன்படுத்தப்பட்ட பை, சாவி, பர்ஸ் முதலிய பொருள்களைத் தனியாக வைக்க வேண்டும். கட்டாயம் மற்ற பொருள்களுடன் இவை சேர்ந்து விடக் கூடாது.
  • வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது வீட்டிற்கு செல்லும் முன்னரே கை, கால்களை நன்கு சுத்தம் செய்து விட்டு வர வேண்டும். முடிந்த அளவு பொருட்களை எடுத்து விட்டு பைகளை கூட வெளியே வைத்து விட்டு வருங்கள்.
  • கதவுகளைத் திறக்க வலது கையை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் நமது அதிக தேவைகள் அந்த கையிலே செய்திருப்போம். நாம் அதிகம் பயன்படுத்தாத கை அல்லது கை முட்டிக் கொண்டு லிப்ட் பொத்தான்களை அழுத்துவது, கைகளை திறப்பது போன்ற செயல்களை செய்யலாம்.
  • வெளியே சென்று விட்டு வந்து குளித்தால் அப்போதே துணிகளை துவைத்து விடுங்கள். நேரம் இல்லாதவர்கள் துணிகளை அலசி மட்டுமாவது காயவைத்து விடுங்கள்.
  • வீட்டில் வயதான பெரியவர்கள், குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் இருந்து தள்ளியிருங்கள். உங்களிடம் இருந்து அவர்களுக்கு வைரஸ் தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம் என்பதால் இதை செய்வோம்.
  • உங்கள் செல்போனில் கிருமிகள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதையும் சுத்தப்படுத்த மறக்க வேண்டாம்.
  • முடிந்தவரை தனிமையாக இருங்கள், நேரம் போகவில்லை போராக உள்ளது என எங்கும் வெளியே செல்ல வேண்டாம்.
  • வீட்டில் இருப்பவர்களுடன் சீரான இடைவெளியை பின்பற்றுங்கள்.

மேலே கூறியதை பின்பற்றினால் உங்களுக்குக்கும் உங்களை சுற்றி இருப்பவர்களளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் கவனமாக இருங்கள். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாமும் ஒன்றிணைவோம்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *