மறந்தும் கூட இந்த விரலை யூஸ் பண்ணாதீங்க… அப்புறம் எல்லாமே நாசமாகிடும்… இப்படி தான் விபூதி வைக்கணும்…!!

விபூதி பூசுவதற்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு விரல்களாலும் ஒவ்வொரு நன்மை, தீமை நடைபெறும்.

கோவிலுக்கு சென்று சுவாமியை வணங்குபவர்கள் இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கப்பெற விபூதியை நெற்றியில் இடுவர். அந்த விபூதியை பூசுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இறைவனை முழுமனதோடு வணங்கி விபூதியை கையில் எடுப்பவர்கள் அதனை சிந்தாமல் எடுத்து “முருகா”, “சிவசிவ” போன்ற மந்திரங்களை கூறியபடியே நெற்றியில் அதனை பூசிக்கொள்ள வேண்டும். அப்போது மறந்தும்கூட கட்டை விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் பூச கூடாது. ஏனெனில் இவ்வாறு கட்டைவிரலால் விபூதி இடுவது தீராத நோயை ஏற்படுத்தி ஒரு மனிதனின் வாழ்வையே புரட்டிப் போடும். இதனையடுத்து விபூதியை ஆள்காட்டி விரலால் பூசிக்கொண்டால் பொருட்கள் நாசமாகிவிடும்.

அதன் பின் விபூதியை நடுவிரலால் பூசிக் கொண்டால் ஒரு மனிதன் தன் வாழ்வில் நிம்மதியை இழக்க நேரிடும். இவை அனைத்திற்கும் மாறாக மோதிர விரலால் விபூதியை தொட்டு பூசிவிட்டால் இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கப் பெற்று அது மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிவகுக்கும். அதன்பின் சுண்டு விரலால் விபூதியை பூசி கொண்டால் கிரக தோஷத்தை ஏற்படுத்தி விளைவை உண்டு பண்ணும். இதனையடுத்து மோதிர விரல் மற்றும் கட்டை விரல் இரண்டையும் சேர்த்து விபூதி எடுத்து கொண்டு நெற்றியில் மோதிர விரலால் விபூதியை பூசிக் கொண்டால் தடைகளை மீறி நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று வாழ்வில் முன்னேறலாம்.