அடக்கடவுளே! புது படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு…. அப்ப தீபாவளி வர பொன்னியின் செல்வன் மட்டும்தானா…..!!!!

இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையங்குகளில் ரிலீஸ் ஆகி 250 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் சில தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இயக்குனர் சுந்தர் சியின் காபி வித் காதல் அக்டோபர் 5-ம் தேதியும், அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் அக்டோபர் 7-ஆம் தேதியும், அரவிந்த்சாமி-த்ரிஷா நடித்துள்ள சதுரங்க வேட்டை 2, காசேதான் கடவுளடா மற்றும் ரீ ஆகிய திரைப்படங்கள் அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாக இருந்தது.

ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல்மழை பொழிந்து கொண்டு இருப்பதால் புதிய படங்கள் ரிலீஸ் ஆனால் வசூலை பாதிக்கும் என்பதால் அனைத்து படங்களுமே ரிலீஸ் தேதியை தீபாவளிக்கு பிறகு தள்ளி வைத்து விட்டனர். இதன் காரணமாக தீபாவளி பண்டிகை வரை பொன்னியின் செல்வன் மட்டும்தான் தியேட்டரில் ஓடும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை என்றால் தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ் ஆகும் கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரன்ஸ் மட்டும்தான் புது படங்களாக  புது ரிலீஸ் ஆக இருக்கும்.