”கோலி எடுத்த செலஃபீ” ரோஹித்துடன் சண்டை இருப்பது உண்மைதான் …!!

இந்திய கிரிக்கெட் அணியில் விராத் கோலிக்கும் , ரோஹித் சர்மாவுக்கும் இடையே சண்டை இருப்பது உண்மை தான் என்று ரசிகர்கள் மீண்டும் விமர்சித்துள்ளனர்.

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து  இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் விவாதங்கள் , கேள்விகள் ஒரு சேர எழுந்தன. மேலும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கவேண்டுமென்ற கருத்தும் எழுந்தது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கு முன் இந்திய கேப்டன் விராத் கோலியின் செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மா மற்றும் கோலி குறித்து எழுந்த விமர்சனகள் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.  அதற்கு பதிலளித்த கோலி , எனக்கு ஒருவரை  பிடிக்கவில்லை என்றால் நான் அவரிடம் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதிலும், என்னுடைய முகத்திலும் நீங்கள் பார்க்கலாம். அது மிகவும் எளிமையான ஒரு விஷயம். ஆனால் நான் ரோகித் சர்மாவை எப்போதுமே  பாராட்டி வந்துள்ளேன். எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது.

இந்நிலையில் , இந்திய வீரர்கள் மியாமியை நோக்கி புறப்படும் முன்பு கேப்டன் விராட் கோலியுடன் செல்பி எடுத்து ட்விட்டரில் பதிவிட்டனர். அந்த புகைப்படத்தில் இந்திய வீரர் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை. உடனே ரசிகர்கள்  உங்களுக்கு பிரச்சனை இல்லை என்றால் ரோகித் சர்மாவின் புகைப்படத்தில் இடம் பெறாதது ஏன் என்று கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். மேலும் உங்களுக்குள் பிரச்சனை இருப்பது உண்மைதான் என்றும்  ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.