மொத அங்க போங்க…. அப்பறம் இங்க வாங்க…. மத்திய பாதுகாப்பு பணிக்கு செக்…!!

பாதுகாப்பு படைக்கு பணியில் சேர விரும்புவோர் கட்டாயம் 2 ஆண்டுகள் தேசிய பேரிடர் மீட்பு படையினரோடு பணி செய்திருக்க வேண்டுமென்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மழை , வெள்ளம், நிலச்சரிவு ஆகிய பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் மீட்புப்பணி அளப்பரியது. தமிழ்நாட்டில்  சென்னை பெரு வெள்ளம் கேரளா , வில் பெருவெள்ளம் , ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் புயல் போன்ற சமயங்களில் இத்தகைய வீரர்களின் தங்களது பணியை செய்தமைக்காக உலகம் முழுமைக்கும் மக்களின் பாராட்டை பெற்றனர்.

இந்நிலையில் பேரிடர் மீட்பு படை வீரர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் அவர்கள் நிறைய சிரமங்களை சந்தித்து , மத்திய அரசிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார்கள். அதில்  மத்திய பாதுகாப்பு படை வீரர்களை தேசிய பேரிடர் மீட்பு படையில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் என்ற  கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கட்டாயம்  இரண்டு ஆண்டு காலம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடன் பணியாற்றி இருக்க வேண்டுமென்று உத்தரவை பிறப்பித்துள்ளது.அந்த வகையில் இனிமேல் சிஆர்பிஎஃப் உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்களாக சேர விரும்புவோர் கட்டாயம்  தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடன் இணைந்து 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற புதிய விதி அமுலாகியுள்ளது.