திரும்பி போ…!! திரும்பி போ..!! சந்திக்க வந்த அமைச்சருக்கு எதிராக கோஷம்…!!

அதிருப்தி MLA_க்களை சந்திக்க சென்ற கர்நாடக அமைச்சரை திரும்பி போ திரும்பி போ என்று ஜனதா தள ஆதரவாளர் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றது. ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் , ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பை விடுதியில் தங்கி இருக்கும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை எப்படியாவது சமாதான படுத்திவிட காங்கிரஸ் முயன்று வருகின்றது.

Image result for karnataka minister sivakumar vs bjp

 

இந்நிலையில் விடுதியில் உள்ள அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து சமாதானம் செய்ய காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் மும்பை விரைந்துள்ளார். அங்குள்ள விடுதியில் அமைச்சர் நுழைய போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகின்றது. அப்போது விடுதியில் இருந்த  ஜனதாதளம் (எஸ்). தலைவர்களில் ஒருவரான நாராயண கவுடாவின் ஆதரவாளர்கள் ஓட்டலின் வெளியே நின்று கொண்டு திரும்பி போ, திரும்பி போ என கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *