கணவனுக்கு சிகிச்சை அளிக்க சொன்னால்…”என்னை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்”… மனைவியின் அதிர வைக்கும் வாக்குமூலம்..!!

பீகார் மாநிலத்தில் மருத்துவமனையில் கணவனுக்கு சிகிச்சை அளிக்க கூறினால் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நொய்டாவை சேர்ந்த தம்பதியினர் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு பீகார் மாநிலத்திற்கு வந்துள்ளன. இதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அங்கேயே தங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் மனைவி அங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவமனையில் கணவனுக்கு சிகிச்சை முறையாக அளிக்கப்படவில்லை என்று மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் கணவனுக்கு சிகிச்சை அளிக்க கூறினால் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் புகார் கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் கணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்குப் பின் மனைவி பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்படுத்தி தனது கணவன் நோய்த்தொற்று காரணமாக இறக்கவில்லை. மருத்துவமனையின் அலட்சியத்தின் காரணமாக இறந்து விட்டார் என புகார் கூறினார். மேலும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனையின் ஊழியரான ஜோதிகுமார் என்பவர் மீதும் அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உரிய விசாரணை நடத்த வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *