“உங்களுக்காக உழைக்க ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் “திமுக வேட்ப்பாளர் அசத்தலான முறையில் வாக்கு சேகரிப்பு !!..

உங்களுக்காக உழைக்க ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று தென்சென்னை வேட்பாளர்  வாக்கு சேகரித்து வந்தது அப்பகுதியில்  பரவலாக பேசப்பட்டு வருகிறது 

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தென்சென்னை மக்களவை தேர்தல் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்க நல்லூர் தொகுதிக்கு  உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் . அப்போது அவர் பேசியதாவது,

தென்சென்னை மண்ணின் மகள் நான், இதே பகுதியில் இருக்கும் நீலாங்கரையில் தான் என் வீடு உள்ளது. நீங்கள் எந்தவிதமான அடிப்படை பிரச்னை என்றாலும்  என்னை உடனே அணுகலாம், உங்களுக்காக உழைப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், நம் பகுதி பிரச்சனை என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும். குடிநீரும், போக்குவரத்து பிரச்சனை தான் இந்த பகுதியில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.இந்த பிரச்னைகளை தீர்பதற்கான திட்டங்கள் என்னிடம் ஏராளமாக உள்ளது என்று பேசினார்.  

சேவை செய்ய  நான் தயாராக இருக்கிறேன் எனக்கு ஒரே ஒரு முறை தென்சென்னையில் உங்களுக்காக உழைப்பதற்கான ஒரு வாய்ப்பை தாருங்கள் உங்களது அனைத்து அடிப்படை பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான ஒரே வழியாக உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று அவர் தெரிவித்தார்.