GST நிலுவை தொகை ரூ 386 கோடியை கொடுங்கள்….. அமைச்சர் வலியுறுத்தல் …!!

தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிலுவை மற்றும் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

35_ஆவது  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. புதிதாக தேர்வாகியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து  மாநில நிதியமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் ,

அமைச்சர் ஜெயக்குமார் க்கான பட முடிவு

69 பொருளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார். தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 4 ஆயிரத்து 459 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் , இழப்பீட்டுத் தொகை 386 கோடியை விரைந்து வழங்குங்க கோரிக்கை விடுத்துள்ளார். மின்சார வாகனங்களுக்கான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கவும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.