“மார்ச் 31” இவங்கள தவிர…. எல்லாத்துக்கும் லீவ் விடுங்க…. ராமதாஸ் வேண்டுகோள்….!!

பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்களை தவிர மற்ற ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்குமாறு பாமக தலைவர்  ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை என்பது அளிக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வில்லை.இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,

பள்ளி , கல்லூரிகளில் மாணவர்களின்றி ஆசிரியர்களும், அரசு பணியாளர்களும் மட்டும் பணிக்கு வருவதால் நோய்த்தொற்று நீங்காது. தொடர்ந்து கொரோனோ பாதிப்பு ஏற்படும். எனவே பொதுத் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை தவிர மற்றவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.