“காதலி பேசாத ஆத்திரம்” சிவனேனு படுத்திருந்த…. முதியவரை கொன்ற கொடூரம்…!!

நபர் ஒருவர் காதலி பேசாத கோபத்தில் முதியவரை எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள இருளப்பபுரம் என்ற ஊரில் வசிப்பவர் கூலி தொழிலாளியான சந்திரன்(62). இவர் சம்பவத்தன்று இரவு இருளப்பபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக மது போதையில் தனது நண்பர்களுடன் வந்த நபர் பாலாஜி முதியவரிடம் லைட்டரை வாங்கியுள்ளார். பின்னர் அதே லைட்டரால் முதியவர் மீது தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்த முதற்கட்ட விசாரணையில், பாலாஜியிடம் அவரது காதலி பேசவில்லையாம். இதனால் கோபத்தில் இருந்த பாலாஜி மது அருந்திவிட்டு வந்து முதியவரை எரித்து கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாலாஜியுடன் சேர்ந்த அவர்கள் நண்பர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.