பட்டப்பகலில்… சாலையோரத்தில் பெண் செய்த செயல்… வெளியான வீடியோ..!!

கொரோனா பரவலுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக கோட் சூட் போட்டு பலரும் வலம்வந்த பகுதி தற்போது போதைமருந்து உபயோகிப்பவர்கள் சுற்றும் பகுதியாக மாறியுள்ளது

கொரோனா  பரவுவதற்கு முன்பு மிகவும் பரபரப்பாக இருந்து வந்த நியூயார்க்கின் முக்கிய பகுதி மான்ஹாட்டன் தற்போதைய சூழலில் முரடர்கள் அராஜகம் செய்யும் பகுதியாக மாறியுள்ளது. மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்வதுமாக நடந்து வருகின்றது. அதேபோன்று பெடஸ்ட்ரியன் பிளாசா முன்பெல்லாம் கோட் சூட் போட்டு வலம் வருபவர்களின் இடமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்றுக்கு பிறகு கட்டிடங்கள் அனைத்தும் வெறுமையாகி கொள்ளை கும்பல் உறுப்பினர்களும் போதைக்கு அடிமையானவர்களும் சந்திக்கும் இடமாக மாறியுள்ளது.

அதோடு அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு போதைமருந்துக்கு உபயோகிக்கப்படும் ஊசிகள் அதிகளவு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பட்டப்பகலில் பெண்ணொருவர் அப்பகுதியில் போதை ஊசி போட்டுக்கொள்ளும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. காவல்துறையினரும் அந்த பகுதியை கண்டுகொள்ளவில்லை எனகுற்றம் சுமத்தும் நிலையில் தங்களுக்கு ஒரே ஒரு புகார் மட்டுமே வந்ததாகவும் அதுவும் தாங்கள் சம்பவ இடத்திற்கு செல்லும் முன் அந்த நபர் அங்கிருந்து தப்பி விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *