மதிப்பெண் குறைவால் ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை !!..சோகத்தில் பெற்றோர்கள் …

மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

கடலூர் முத்து நகர் அருகே உள்ள கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை என்பவர் இவரது மகள் காவியா அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில் தேர்வு முடிந்த நிலையில் மதிப்பெண் முடிவிற்காக காத்திருந்தார்

இதனை அடுத்து தேர்வுகளுக்கான முடிவானது நேற்றைய தினம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது அதில் காவியா அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் ஆனால் 600 மதிப்பெண்ணிற்கு 244 என்று குறைவான மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்து வீட்டில் தனிமையில் காணப்பட்டார் இந்நிலையில் திடீரென அழுதுகொண்டே வீட்டிலிருந்து வெளியேறினார்


அதன் பின் ரயில்வே தண்டவாளத்தில்    அமர்ந்து அழுது கொண்டிருந்தார் அதன்பின்  கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி செல்லும் ரயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் தற்கொலை செய்துகொண்ட காவியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் அதன் பின்  தகவல் அறிந்த பெற்றோரும் காவல்துறையினரும்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அதன்பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது