“இளம் பெண் தீ குளித்து தற்கொலை” உதவி ஆட்சியர் விசாரணை…!!

கீழ்பென்னாத்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருவண்ணாமலை உதவி மாவட்ட  ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவர் கூலி தொழிலாளியாக பனிப்புரிகிறார் . இவரது மனைவி இந்துஜா 21 வயது  .இவர்களுக்கு திருமணமாகி 2 வயதான ஹரிணி மற்றும் 4 மாதத்தில் சுகாசினி என்ற இருமகள்கள் உள்ளனர். இந்துஜாவிடம் அவரது கணவர் கார்த்திகேயனும், மாமியார் சேர்ந்து அடிக்கடி தகராறு செய்வதால்   தனது தாய் வீட்டிற்கு இந்துஜா சென்று விடுவது வழக்கம். பின்னர் மகளை சமாதானம் செய்து மீண்டும் வேடநத்தம் கிராமத்திற்கு  அனுப்பி வைப்பார்கள் அவரின் பெற்றோர்கள்.

இந்த நிலையில் நேற்று இந்துஜாவை அவரது கணவர் மற்றும் மாமியார் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த இந்துஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய்  ஊற்றி கெண்டு தீ வைத்து கொண்டார். அவரது கதறல் சத்ததை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லும் வழியிலேயே இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும்   திருவண்ணாமலை உதவி மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருககின்றார்.