“யார் அந்த இரக்கமற்ற பெண்” அதிர்ச்சியடைந்த டாக்டர்கள்…. மருத்துவமனையில் பரபரப்பு….!!

மருத்துவமனையிலுள்ள கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறையில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இறந்த நிலையில் கிடைப்பதாக மருத்துவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அய்யர் மலை பகுதியில் வசித்து வரும் 20 வயதுடைய பெண் ஒருவர் பிரசவத்திற்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவருக்கு உதவியாக அவரது தாய் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் கழிவறைக்கு சென்று வந்த பின்புதான் பெண் குழந்தை கழிவறையில் இறந்து கிடந்தாக அங்கிருந்தவர்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.